திங்கள், 30 ஆகஸ்ட், 2010

எனக்கு தெரியும்

மர நிழலில் நிற்பதை விட
உனது நிழலில் நிற்கவே விரும்புகிறது
எனது பாதம்...


இளநீரும்,பழச்சாறும் பருகுவதை விட
உனது கைவிரல் பட்ட தண்ணீருக்கே காத்திருக்கிறது
எனது உள்நாக்கு...

தங்க மோதிரம், வைர ஆபரணம்
நீ அணிந்தால் அழகு என்று சொல்வதுண்டு
எனக்கு மட்டும்தான் தெரியும் மிகச்சிறந்த அழுகு
மருதாணி பூசி சிவந்திருக்கும்
உன் விரலென்று...
மழை,தென்றல்,வெயில்

எது எதுவிற்கோ காத்திருப்போர் மத்தியில்
உனது வருகையில் எழும் காலடி ஓசைக்காக
காத்திருப்பது நான் மட்டும் அல்ல உன் கொழுசும்தான்...

எப்பொழுதெல்லாம்
தூரல் சொட்டுமோ
அப்போதெல்லாம் என் மனது மாபெரும் கவலையை சுமக்கும்
எங்கே... மழையில் நீ நனைவாய் என்றல்ல
ஒரு குடையாய் நான் பிறக்கவில்லை என்று...

குருவிகளின் சத்தம், அருவிகளின் முத்தம்
முதல் மழைத்துளியின் தழுவல் இப்படி எல்லாவற்றையும்
ரகசியமாக உன்னுள் இருப்பது தெரிந்தும்
எப்படி நான் ரசிக்காமல் கடந்து செல்வது...

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் இருக்கும்
உயிர்ப்புகளும்,பொய்ப்புக்களும் ஏராளம்தான்
அது அத்தனையையும் ஒட்டு மொத்தமாக
ஓரப் பார்வையில் சொல்லிச் சென்றது நீ தானே...

பகல்,இரவு,வெண்ணிலா,விண்மீன்
உணவு,கனவு,கற்பனை,எதிர்காலம்
தூரம்,நிமிடம்,பாதை,பயணம்,வாழ்கை
எல்லாம் நீயே என்று சொல்ல வைத்தாய்
என்னருகில் அமர்ந்த அந்த ஒற்றை நிமிடத்தில்...

நேசிக்கவே தெரியாதவன் என்று
நெருங்கியவர்கள் சொல்லியது
வெறும் கதையயன்று எல்லாவற்றின் மீதம்
காதல் கொள்ள வைத்து கவிஞனாக்கினாய்...

இந்த பிரபஞ்சத்தில் பஞ்சாய் பறந்து
திறிந்த என்னை விளக்கில் சுடர் விட்டு
எரியும் திரியாய் மாற்றி வெளிச்சத்தின்
வாசற் கதவு அருகில் நின்று ரசித்தது நீ...

பணம்,பந்தம்,பாசம்,பரிவு
புகழ்,வீடு,சொத்து,வானம்,பூமி
இப்படி உனக்கென்று நீ கேட்டதில்லை
என்னிடம் எப்பொழுதும்...

முதுமையில் சாய என் மார்பு
பாச தீண்டலின் மெய்சிலிர்ப்பு
மாறாது தோள் தாங்கும் காதல் உயிர்ப்பு
மரணம் வரை உள்ளங்கை சேர்ப்பு
எனக்கு தெரியும் இதை தவிர
நீ என்னிடம் வேரேதும் எதிர்பார்ப்பதில்லை என்று !!


மு.வித்யாசன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக