
ஒற்றை வண்ண தாவணி..
இரவும், பகலும் மறையாமல்
உள்ளங்கையில் ஒளிரும் முழு மதி...
ரேகை எனும் சாலையில்
பூத்திருக்கும் நிழற்குடை...
இமைகள் இன்றி
விழித்திருக்கும் அழகிய விழி...
உன் விரல்கள் கோலம் போட
நான் யிட்டுக் கொண்ட புள்ளி...
உனக்கு மட்டும் புரியும்
இந்த புன்னகையின் மொழி...
நீ...
பக்கம் வரும் முன்
வெட்கம் கொள்கிறது ஏனோ .

என் மருதாணி !!



---------mvidhyasan@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக