சனி, 4 செப்டம்பர், 2010

விதி விலக்கா


உனக்கு
உலகமே
நிசப்தமானது
என் மெளனத்தால்...

தனிமை
உலகத்தில்
நீ‡தள்ளப்பட்டாய்
நான் தள்ளிவைத்ததால்..

நீ கதறுகிறாய்
நான் இருதய
கதவை அடைத்ததும்...

உனக்குள்
பூகம்ப புலம்பல்கள்
நான் கோபித்ததும்...

வெறுமையின்
உச்சத்தில் -நீ
நான்- உனை
வெறுத்து விட்டதால்..

எனக்குள்
அனுதாபம் ஏற்படுத்தவில்லை
நீ சொன்ன வார்த்தைகளும்
செய்த செயல்களும்...

துடிதுடித்து
நீ ஏங்கினாலும்
நடிப்பு என்றுதான் தோன்றுது...


எனக்காக வா
இவ்வளவும்
என்று யோசிக்கும்
போது
என் அழகும் கொஞ்சம் கூடுது...

மாண்டு விடுவாயா ?
மறந்து விடுவாய ?

இல்லை...

காய்ந்து விடுவாய ?
கடந்து விடுவாயா ?


இல்லை...

சாய்ந்து விடுவாயா ?
ஓய்ந்து விடுவாயா ?

என்ன செய்ய போகிறாய்
நான் இல்லாது ?

கவி எழுதி எழுதி
கரைந்து போவாயா ?

கன்னம் வீங்க வீங்க
அழுது கவிழ்வாயா ?

உன் கைகள் ஏந்தி
காதல் பிச்சை கேட்க போகிறாயா ?

இன்னும் கேள்விகள்
இரு வானம் அளவுக்கு
இருக்கு-உன்னிடம்...

ஒரு வேளை
நீ இல்லாமல் போன பிறகுதான்
புரிவேனோ
உன் அன்பினை..

எதுவாக இருந்தாலும்
சரி
பொதுவாகவே
நிஜமான காதலுக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா ?

 -வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக