ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா -3

உலகத்தை ஊதி தள்ளிவிடுவேன் என்றவர்கள்
கல்லறைக்குள் உறங்குகிறார்கள் !
அண்டத்தையே ஆட்டி படைத்தவன் என்றவர்கள்
அக்னிக்கு உணவாகி சாம்பலானார்கள் !
உலகத்தின் கடைசி வரிசையில் நின்றவன்
ஆளும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆச்சர்யமானான்!
புல்லாக ஒடுக்கப்பட்டவன்
புலியாக மாறி பூமி பந்தை புறட்டிபோட்டிருக்கிறான்!
காலத்தின் சக்கர பற்களில் சிக்கி
சிலாகித்தவர்களும் உண்டு !
சிதைந்து போனவர்களும்வுண்டு!
தீராவின் மனதிற்குள் ஏனோ
இப்படி எழுந்தன கேள்விகள்!
இயற்கையை அரைத்து உள்ளத்தில்
பூசி மகிழ்ந்தவன் கண்ணில்
ஒரு பெண்!
என்ன செய்வான்?
இறக்கை விரித்து பறக்கும்
பறவையாய் ஆனான்!
தீரா...!

அழகின் !
அதிநீள ஆறு!
ஐந்தடி பூ!
வாசம் வீசும் நிலா!
மீராவை..
ஆற்றங்கரையோரம் கண்டான்!
ஆவி சிலிர்த்தது!
பட பட வென இருதய மரம் சாய்ந்தது!
கட கட வென இரு விழிகள் அளந்தது!
மள மள வென காதல் தீ - கடல் பொங்கியது!
குபு குபு வென காம தீ பற்றியது!
தீரா! உரு மாறி ஒரு
நீராவியானான்!
கவனித்தான் மீராவை!
கருமேகமும், நடுநிசி இருட்டும்
காந்தமும் பிணைந்த ரசமாய்
கருங்கூந்தழ்!
சகாரா பாலைவன
சலிக்கப்பட்ட மணலை குழைத்து
செதுக்கப்பட்டதாய் நெற்றி!
கவிழ்ந்த படகாய்
விரிக்கப்பட்ட குடையாய்
ஒற்றை வானவில்லாய்
மெலிந்த நீள இலையாய்
இமைகள்!
உருளும் கருப்பு உலகம்
மிதக்கும் முத்து
கர்வம் துளைக்கும் குண்டு
சிரிக்கும் சோவி
அதிர்நதான் தீரா
இதுயாவும் விழயாக கண்டு!

சாய்ந்த கோபுரமாய்
துடிப்பை நிறுத்தும் நங்கூரமாய்
நாசி!
மடித்த ரோஜா இதழல்களாய்
சுருக்கி பொருத்தபட்ட சங்காய்
வீசாத சமரமாய்
செவிகள்!
பஞ்சு பொதியாய்
பிஞ்சு பூவாய்
சதை பிடித்த காற்றாய்
கன்னங்கள்!

மொழுகிய மெழுகாய்
நெய்யப்பட்ட பட்டு நூலாய்
மேவாய்!
ஒற்றை படகு
ஒரு வரி கவிதை
நத்தையின் உடம்பு
மேல் உதடாய்!
உருகும் அருவி
ஒழுகும் தேன்
சிவப்பு தோட்டம்
கீழ் உதடாய்!
உரைந்தான்
உடைந்தான்
உருகினான்
கருகினான்
பிளிறினான்
மெளனித்தான்
மறித்தான்
உயிர்த்தான்
தீரா !
அதற்குள் நடந்தது
அடுத்த ரசனை தேடல்!
கொய்யா மர வளவளப்பு
பாலை வன மணல் பரப்பு
முத்துகள் முகாமிடும் கூடாரம்
கழுத்தாய்!
பப்பாளி தளதளப்பு
பாதரச மினுமினுப்பு
எண்ணெயில் மூழ்கிய கூழாங்கல்லாய்
தோள்கள்!
மா மலைகள் மல்யுத்தம் செய்து
வெற்றி கொண்ட இரண்டு
மண்டியிட்டு மறைந்திருந்தது
மார்பகமாய்!
உள் நாவில் துளி ஈரமில்லை!
வார்த்தைகள் வசபடவில்லை!
நினைவுகள் கசிந்தன!
உணர்வுகள் பிசுபிசுத்தன!
கனவுகள் நசநசத்தன!
விளக்கை சுற்றி
விழுந்து எழுந்த
விட்டில் பூச்சியாய் தீரா !
அசையும் வானவில்லாய்
நீண்டிருக்கும் மெழுகுகாய்
கைகள்!
அளவெடுக்கப்பட்ட காம்பாய்
மெல்லிய ஸ்வர கம்பியாய்
உருட்டி வைக்கப்பட்ட மாலையாய்
விரல்கள்!
உரசிய சதுர பொட்டகம்
வளரும் வைரம்
முளைக்கும் சித்தரம்
விரல் நகம்!
ஆற்றின் வளைவு
உடுக்கையின் சரிவு
மலையின் நெளிவு
நடுவில் பூமியே மூழ்கும் குழி
இரு தீவு ஒட்டிய குட்டி
இடை!
பனிக்கட்டி மேடை
கண்ணாடி பாளம்
மின்னும் சட்டம்
முதுகுபுறம்!

தீரா!
குளிர்ந்த நீரில் குதித்த
நெருப்பு சூரியனாய்!
கனல் கக்ககும் எரிமலையில்
கானலாகும் துளி பனியாய்!
பூகம்ப விரிசலின் இடையில்
பூத்திருக்கும் பூவாய்!
கடும் புயல் கடந்த பின்
நடந்து வரும் காற்றாய்!
உருமாறியிருந்தான்!
தீரா!
தங்க தூண்
யானை தந்தம்
தொடையாய்!
அழகிய விழுது
பெருத்த புல்லாங்குழல்
முழங்கால்!
படந்த தாமரை இலை
பால் ஊறிய நிலா தோல்
பாதம்!
படுத்து கிடக்கும் கிரீடம்
காற்று நடமாடும் படிகட்டுகள்
கால் நகங்களாய்!
மேகம் உடைந்தால் மழை உதிரும்!
தீ உடைந்தால் கதகதப்பு வெளிப்படும்!
பூமி உடைந்தால் புத்துலகம் பிறக்கும்!
நீர் உடைந்தால் ஈரமாகும்!
காற்றுடைந்தால் நிசப்தமாகும்!
அலை உடைந்தால் கடல் மூழ்கும்!

ம்...ம்...
மனம் உடைந்தால்!
நினைவு உடைந்தால்!
ஆணவம் உடைந்தால்!
அர்த்தங்கள் உடைந்தால்!
வார்த்தைகள் உடைந்தால்!
மோகம் உடைந்தால்!
வேகம் உடைந்தால்!
தடுமாற்றம் உடைந்தால்
கவனம் உடைந்தால்!
நிகழ்வுகள் உடைந்தால்!
நிதானம் உடைந்தால்!
உடல் உடைந்தால்!
உயிர் உடைந்தால்!
என்னவாகும்?
காதல் பெரும் !
தீரா!
உடைந்தான்!
உருண்டான்!
இருண்டான்!
வெளிறினான்!
ஒலிந்தான்!
ஒளிர்ந்தான்!
குளிர்ந்தான்!
நெருப்பானான்!
நேரம் மெல்ல
தேய தேய
தானும் தேய்ந்தான் !
தீரா ...!

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக