ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தீரா - மீரா 5

காம்புகள் கூட பாரம்தான்
பழுத்த பிறகு!
உதிரல் கூட தூரல்தான்
இலையுதிர் காலத்தில்!
அழுகை கூட அழகுதான்
மழையாய் வடிகையில்!
கல் கூட சிற்பம்தான்
சிற்பி உளி சிலிர்கையில்!
மரம் கூட வீடுதான்
பறவை கூடு கட்டுகையில்!
மனிதன் கூட மரம்தான்
இரக்கத்தை தொலைக்கையில்!
தீரா கூட காகிதம்தான்
மீரா எனும் கவிதை எழுதைகையில்!
அழகை கண்டால்
இதயம் ஆசையில் தவழும்!
அதிசயம் நடந்தால்
மனம் ஆச்சர்யம் கொள்ளும்!
ரகசியம் கேட்டால்
செவிகள் துள்ளி குதிக்கும்!
ஓவியம் உயிர்த்தால்
வர்ணங்கள் கர்வத்தில் அமரும்!
பிறை ரசிக்கப்பட்டால்
இரவு மயக்கத்தில் நகரும்!
காற்று ஸ்வாசிக்க நினைத்தால்
மூங்கில் காட்டுக்குள் நுழையும்!
தீரா!
மீராவை பார்த்தான் !
அழகாக!
அதிசயமாக!
ரகசியமாக!
ஓவியமாக!
பிறையாக!
காற்றாக!
அவன்
என்னவெல்லாமோ ஆக!
பார்த்தான்!

நிலா !
ஒரு முறை தேயும்
நாளிகை நகர்ந்தது!
காற்று!
இலை கோதி
தள்ளாடும் நிமிடமானது!
அந்த கண இடைவெளியில்
தீரா தீர்ந்து போனான் !
மீரா எனும்
மலர் மோதி!
தூரத்தில்
மிதப்பதால் தான்!
தீண்டபடாத கன்னியாய்
வெண்ணிலா!
உயரத்தில்
மின்னுவதால் தான்!
சூட்ட முடியாத புன்-நகையாய்
விண்மீன்!

அளவிட
முடியாததால் தான்!
பருக முடியாததாய் ஆடுகிறது
கடல்!
கண்ணுக்கு
தெரியாததால்தான் !
கையில் சிக்காது கடக்கிறது
காற்று!
அடுத்து
அறியாததால் தான்
அச்சத்தை ஏற்படுத்துகிறது
மரணம்!
அழித்து!
அடக்கி!
ஒடுக்கி!
ஒதுக்கி!
தாக்கி!
பதுக்கி!
நசுக்கி!
கசக்கி!
பொசுக்கி!
பிசுக்கி!
மடக்கி!
உருக்கி...
எப்படி?
வைத்தாலும் - சரி
முளைத்து கொண்டிருக்கிறது
காதல்!!
தீரா!
கண்களுக்கு புலப்பட்ட
கண்ணாடியில்
தன் முகம் பார்க்க
புறப்பட்டான்!

சில நேரம் ..
சிங்கம் சிறகாகும்!
தீரா சிறகானான்!
சில நேரம் ..
அசிங்கம் அழகாகும்
(அழகிகளிடம் பேசும்போது )
மீரா-வை நெருங்கினான் !
என்ன நடந்தது...??
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக