பெரும்
இரைச்சலைப் பிழிந்து காதுகளின் நரம்பு வழியாக செலுத்தி மூளையின் பாதைகளில்
நிரம்பியிருக்கும் மூங்கில் காடுகளில் ஓங்கி வளர்ந்திருக்கும் கிளைதனில்
துளையிட்டு வண்டு சென்றதை பின்தொடர அது ராகமென உருமாறி உடலெல்லாம் உணர்ந்து
பூத்தலின் பின் அதிலிருந்து வெளிப்படும் வாசத்தின் மயக்கம் கள் விட கடு
போதை தலைக்கேறி காண்பது யாவும் கற்பனைக் குதிரையின் கடிவாளமற்ற வேகத்தின்
மீதமர்ந்து பயணப்படும் தூரங்களின் நுழைவாயில் புதிர்களைச் சமைத்து வைத்துக்
காத்திருக்கும் எதிர் காலத்தின் தேய், வளர் பிறை பிம்பங்களின் இருள்
முடிச்சுக்களை கட்டவிழ்க்கும் மெல்லிய விரல் தொடுகையின் சுகம் யாழினை
மீட்டும் நரம்பென மேவிப் பரவும் மன ஆற்றில் மூழ்கி கசிந்துருகும் நீரின்
தழுவலானது நின் வண்ணக் கூழாங்கற்கள் ~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக