வான் பார்த்த மழையாய் நீ வந்தாய் சுகமாய் இருள் சேர்த்த நிலவாய் நீ இருந்தாய் துணையாய் ;
ரயில் ஜன்னலாய் என் அருகினில் அமர்ந்தாய் குளிர் போர்வையாய் என் உடலினில் இணைந்தாய் ; கடல் சங்கொலியாய் காதினில் நிறைந்தாய் மடல் காகிதமாய் மனதினில் பதிந்தாய் ; எனக்குள்ளே நான் இல்லையடி பெண்னே தனக்குள்ளே பேசிடும் இன்பம் தந்தவள் நீதானே ~~~
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக