செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

நம் அம்மாக்கள்

தன்னையே உருக்கி தன்னையே

உருவாக்கும் கருவறை உலகம்...

ஒவ்வொரு கட்டமும் உள்ளுக்குள் நிகழ்வதை
உணர்ந்து பெருமையடையும் உன்னதம்...
சுமைகளை சுகமாக தாங்கி கொண்டு
உலகிற்கு உயிரை அறிமுகப்படுத்த
காத்திருக்கும் தன்னலமற்ற இருதயம்...

தான் ஏழை என்ற போதும்
ஈன்றதும் வான் செல்வம் அடைந்ததாய்
உச்சி முகரும் அந்த தருணம்...

வறுமையின் பட்டினி பிடியில்
தன் பிள்ளை பசியாற்ற மார்பில்
பால் சுரக்கச் செய்யும் அட்சயபாத்திரம்...

கட்டிலுக்கும்,தொட்டிலுக்கும்
இடையில் கசங்கி சருகான போதும்
எதிர்பார்ப்பின்றி உழைக்கும் ஓவியம்..


அடுப்படியே அடிப்படை உலகமாய்
அயராது புரியும் பணிவிடையே பாடமாய்
அன்றாடம் கரைகிறது வீடதோறும் ஒரு மெழுகு...

எதிர்கால பூந் தோட்டதிற்காக
எல்லோராலும் செதுக்கப்பட்டு உளியின்
வலி தாங்கி வழி காட்டும் சிலை...

விழிகளில் ஒளி மங்கிய பின்பும்
செவியின் அறை பலமிலந்த பின்னும்
தெரு முனையில் வரும் காலடித் தடங்களில்
தம் பிள்ளைகளின் ஸ்வாசம் வருடம் தெய்வம்...

முதியோர் இல்லங்கள் பெருகிய காலத்திலும்
தனிக் குடுத்தனங்கள் தலைவிரித்தாடும் யுகத்திலும்
இன்னமும் மட்டுமல்ல என்றெனறும்
இடுப்பில் சுமக்குதம் பிள்ளைக்கு வியர்க்குமென்று
தம் முந்தானை கொண்டு முகம் மூடுவதுண்டு
நம் அம்மாக்க
ள்!!
 


 மு.வித்யாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக