செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கடிதம்

தூரங்கள் துயரங்களானது
பாசத்தை விற்று பணம் ஈட்டுவதால்

எல்லா வசதிகளும் இங்குண்டு
உன் மடியில் தலை சாய்த்து
தூங்க மட்டும் முடியாது

புயல் வேகத்தில் பறக்கும் வாழ்க்கை;
புழுதி உடுத்தியதால் நீ அடித்த
அந்த நாட்கள் போலில்லை

சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு

வித விதமாய் புத்தாடை;
மழை சொட்டும் நேரதத்தில் நீ மூடும்
கிழிந்த முந்ததனையின் சுகம் இதிலில்லை

எடுப்பு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்‡ எனை
இடுப்பில் தூக்கிக் கொண்டே‡நீ
அடுப்பில் வேலை பார்த்த அதிகாரம் இன்றில்லை

விஞ்ஞான வளர்ச்சியில்
மின்அஞ்சல், அலை பேசி நம் இடைவெளியை
குறைத்தாலும், கனத்த நெஞ்சோடுதான் நாளும்

அம்மா...
உனை அழ வைக்கவே எழுதுகிறது இந்த கடிதம்

இப்படிக்கு
உன் மனசு .

மு.வித்யாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக