செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

தொலை தூரத்தில்

கம்பன் வர்ணிக்க முடியாத அழகு
செல்லி கண்டிராத அற்புதம்
எப்படி சொல்வது
எழுத்துக்கள் அணிவகுத்து
வெட்கம் கொள்கிறது
உன்னை வர்ணிக்கும் வேளையில்...

இயற்கையை குழைத்து
செய்யப்படவளா நீ...

வானவில்லில் நூல் எடுத்து
பிண்ணப்பட்டவளா நீ...

அய்யோ....
என்று உனை காணும் பொழுது எல்லாம்
என் மனதுக்குள் ஆவல் எனும் ஆறு பாய்கிறது....

கைகளை முட்டி,முட்டி
கவிதை சொல்கிறது
உனது...
கண்ணாடி வளையல்

நிலவு வெட்டி ஒட்டி வைத்தாற்
போன்று எனை குத்துகிறது
உனது மூக்குத்தி...

கூர் மழுங்காத கத்தியா ?
உன் கண்கள்..

கவிழ்ந்த குடையா ?
உன் இமை

கடல் இல்லாத அலையா ?
உன் இதழ்

மூங்கில் காடா ?
உன் கழுத்து

குலையும் மலையா ?
உன் மார்பு

அப்பப்பா...
நீ.. ச்சீ ... என்று
இசை மீட்டும் போது
என் உயிர் கரையில்
எத்தனை எத்தனை ஓசை

இது வரை...
விடை எழுத முடியவில்லை
கோடிட்ட உனது இடையில்...

மடி என்று நினைத்துதான்
துயில் கொண்டேன்

மடையன் நான்...

மடி அல்ல மடி அல்ல
மயில் காட்டில் அல்லவா கண் அமர்ந்தேன்...

காற்று தீண்டி கரைந்திருக்கிறேன்
கவிதை தீண்டி மறைந்திருக்கின்றேன்
கானம் தீண்டி நனைந்திருக்கிறேன்
மழை உரசி உடைந்திருக்கிறேன்...

எப்படி சொல்ல

உன்...
விரல் தீண்டிய அந்த நிமிடத்தில் மட்டுமே
எல்லா வற்றையும் ஒன்றாக உணர்ந்ததை....

மழை பெய்யும் நேரத்தில்
உன் இமை தேடுவதுண்டு
நான் நனையாமல் ஒதுங்கிக் கொள்ள
எனக்கான குடை அதுவென்று...

இன்னும் உன்னை ரசிக்க ருசிக்க
அலாதி ஆசை

என்ன செய்ய...

தாவி தழுவும் நினைவோ பக்கத்தில்
லகிக்க முடியாமல் தவிக்கிறேன்

நீயோ...

தொலை தூரத்தில்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக