வியாழன், 4 ஜூன், 2015

கடுகும் கலங்கேன்

காலமே கடுகும் கலங்கேன்
வேதனைகள் சூழ்ந்து
வெந்தென்னைச் சாம்பலாக்கினும்
சோதனைகள் புரிந்து
சோக சூட்சமங்கள் சூடினும்
பல காரணங்களாய் எழுந்து
சோர்ந்திட்டு பேரிருளில் சாய்த்திடலாம்
மிகச் சாதாரண மனிதன் - இவன்
என்றெனை நினைத்தாயோ
தமிழ் ஈன்றவனை ஒருபோதும்
கவலைகள் தின்னாது
என்பதனை மறந்தே
என் முன்னே வந்து நீ நின்றாயோ
மாயனேப் போய்விடு; மார் பிளக்கும்
நரசிம்மனாய் எனை மாற்றிடாது ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக