வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணன் முகமே காண்பது சுகமே

கண்ணன் முகமே

காண்பது சுகமே
எண்ணம் யாவும் - அவன்
நீல வண்ணமே ;

காலை கதிராவான்
கருமை நிறமாவான்
காண்பது யாவிலும் - பெரும்
காதல் கொள்வான் ;

இரு விழி திறப்பான்
இதயம் வதைப்பான்
இதுவும் போதாதென
இறுக இரு கை அனைப்பான் ;

மாலை சோலையில்
மனமது தேடையில்
மரமது பின்னே
மறைந்தே என் முகம் ரசிப்பான் ;

மான் விழி காணாது
மழையென கசிந்திட
மனமது மாறியே - புது
மாலையாய் தோளினில் சாய்வான் ;

இதழினை ருசிப்பான்
இடையினை பிடிப்பான்
இரவது இமை மூடாது
இன்பக் குழலது இசைப்பான் ;

ஆடை அவனாவான்
ஆசை அழகாவான்
ஆயுள் முழுதும் அழியா
அன்பை பொழிவான் ;

தாயாய் மடி சேர்ப்பான்
சேயாய் பிடிபடுவான்
நேசனாய் அடிபடுவான்
வேசமிடுவோர்க்கு தானே கள்வன் என்பான்;

கோகுலம் சுழல்வான்
கோபியர் கொஞ்சுவான்
கோபம் உடைப்பான்
கோதையின் நெஞ்சினில் விரல் கோலமிடுவான் ;

ராகவன் வருவான்
தீரா காதல் தருவான்
வேரெனக் கேட்பேன்
மாயவன் அவனே மீரா மையல் தீர்ப்பான்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக