வியாழன், 28 ஜனவரி, 2016

** நீ + நான் ** ~~~~~~~~~~~~~~

தூரத்தில் நீ
தொடர்ந்து தேய்வது நான்

வட்டமாய் நீ
வட்டமிடுபவனாய் நான்

வெளிச்சமாய் நீ
இரவாய் நான்

புள்ளியாய் நீ
சுற்றி அலையும் மேக புகையாய் நான்

பந்தாய் நீ
தட்டி விளையாடும் இமைகளாய் நான்

பனித்துளியாய் நீ
உருகுகிறேன் நான்

அப்பளமாய் நீ
பார்த்தே பசியாருகிறேன் நான்

சக்கரமாய் நீ
சுழலும் பொழுதாய் நான்

பொட்டாய் நீ
தொட்டாடும் மர இலையாய் நான்

வெண் "மை" யாய் நீ
நிரப்பிக் கொள்ளும் பேனாவாய் நான்

கண்ணாடியாய் நீ
முகம் பார்க்க முடியாதவனாய் நான்

பலுனாய் நீ
பறப்பவனாய் நான்

பழமாக நீ
பறிக்க முடியாதவனாய் நான்

நிர்வாணமாய் நீ
வெட்கத்துடன் நான்

நாணயமாக நீ
சேமிக்கும் நாயகனாக நான்

ஒளிந்து கொள்வாய் நீ
தேடுபவனாக நான்

காதலியாக நீ
காதலனாக நான்

தனிமையாய் நான்
தேவதையாய் தேடி வருகிறாய் நீ !!

(** மீள் **)

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக