வியாழன், 28 ஜனவரி, 2016

முண்டாசு முகம்

ஐய்யம் வந்தென்னை அனுகிட
அச்சமயம் அச்சம்கொண்டு
நானுன்னருகில் வந்தமர்ந்திட
வீரம் பொங்கிடும் விழிகள் கனலாகிட


துன்பம் வந்தென்னை துளைத்திட
துணிவற்று நொந்திட
நின் எழுத்தினை வாசித்திட
விசமென தீண்டியது இன்பமென என் வசமாகிட


கண்டதாவும் மீது மனமது ஆசையில் தாவிட
அது வெறும் கனவாகிட
முண்டாசு முகம் தனை நினைந்திட
அக்கணம் எண்ணியது மீறாது என் கை வசமாகிட 


சொல்லது தடுமாறி பொருளது உருமாறிட
வல்லதென யாவும் ஆகிட
நின் நெஞ்சுறுதி சிந்தையிலே நின்றாட
சிதறி விழும் வார்த்தையெல்லாம் சந்தமாகிட


வஞ்சகர்கள் சூழ்ந்தே தினமென்னை வதைத்திட
வலியது தாங்கது கசிந்திட
நின்னது வாஞ்சை மொழி கேட்டிட
வன்துயர் வான் பறவையாய் பறந்திட


சோம்பலது சதையாகி சோர்ந்தே வீழ்ந்திட
ஆகுவது இனியேதுமில்லை அடிமையாகிட
அக்னி குஞ்சென்று நீ பாடிட
சாய்ந்த சாம்பலில் புது சக்தி பிறந்திட


இப்பூதவுடல் வீண் பாரமென்று ஆகிட
யாருமில்லை உடனென்று நேர்ந்திட
நின் சத்திய வார்த்தைகளை நினைவு கூர்ந்திட
நான் செத்தே போயினும் பிளைப்பேன் பூமி வியந்திட


அதன் காரணம்
யாரெனக் கேட்டிட
பாரதி உன் மீதுள்ள
தீராக் காதல் என்பேன்
யாவரையும் விட~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக