கண்கள் சொருகுதடா
கண்ணா...
உனைக் காண்பதென்றால்
செங்கதிராகுதடா ;
கண்ணா...
உனைக் காண்பதென்றால்
செங்கதிராகுதடா ;
நெஞ்சம் பாலையடா
கண்ணா...
நீ எதிர் நின்றால்
புது வெள்ளம் பாயுதடா;
சொல்லது திக்குதடா
கண்ணா...
நின்னை நினைந்தால்
தேன் கவிதை சொட்டுதடா;
சில்லென்ற காற்று வேகுதடா
கண்ணா...
நின்னை சிக்கென்று பிடித்தால்
தீயது இனிக்குதடா;
வெண் பாலது கசக்குதடா
கண்ணா
நின் கண் பார்வை பட்டால்
வேம்பது அமுதமடா;
வெண் மேகமது கலையுதடா
கண்ணா...
நின் மேனி கண்டால்
அது வெண்ணெய்யாய் உருகுதடா;
ஓடும் நீரது அழுகுதடா
கண்ணா...
உன் பாதம் பட்டால்
தாவி ஆடிடும் அலையாகுதடா;
வீசு தென்றல் விம்முதடா
கண்ணா...
உன் விரல் அசைந்தால்
புல்லாங்குழல் இசையாகுதடா;
விரியும் பூவிதழ் நோகுதடா
கண்ணா...
உன் வரவினைக் கண்டால்
புன்னகை சிந்துதடா;
மாரது மயங்குதடா
கண்ணா...
நின்னை மறவேன் என்றிடாது
மனமது வணங்குதடா;
என் வாழ்வது நீயேடா
கண்ணா...
அது என்றும் மாறிடாது
பா மாலை சூட்டுதடா;
யாவிலும் நீயேடா
கண்ணா...
என்னை யாழென மீட்டிட
மடி தருவாயடா;
மிகு ஏழை நானடா
கண்ணா...
உன்னை காதல் கொள்வதில்
யானே பெருங் கள்வனடா;
சிறு முத்தம் வைப்பாயடா
கண்ணா...
நிதம் அதில் பித்தென
மனம் மாறி ஆசை புற்றாய் வளர்வாயடா;
குறு யுத்தம் செய்வாயடா
கண்ணா...
குருவென மாறி
பின்னதன் அர்த்தம் உரைப்பாயடா;
இப் பாத்திரம் நீயேடா
கண்ணா...
நீ இல்லையேல்
நான் ஏதுமற்றேனடா;
கண்ணா....
கண்கள் சொருகுதடா
கண்ணா...
உனைக் காண்பதென்றால்
செங்கதிராகுதடா~~~~
- வித்யாசன்
கண்ணா...
நீ எதிர் நின்றால்
புது வெள்ளம் பாயுதடா;
சொல்லது திக்குதடா
கண்ணா...
நின்னை நினைந்தால்
தேன் கவிதை சொட்டுதடா;
சில்லென்ற காற்று வேகுதடா
கண்ணா...
நின்னை சிக்கென்று பிடித்தால்
தீயது இனிக்குதடா;
வெண் பாலது கசக்குதடா
கண்ணா
நின் கண் பார்வை பட்டால்
வேம்பது அமுதமடா;
வெண் மேகமது கலையுதடா
கண்ணா...
நின் மேனி கண்டால்
அது வெண்ணெய்யாய் உருகுதடா;
ஓடும் நீரது அழுகுதடா
கண்ணா...
உன் பாதம் பட்டால்
தாவி ஆடிடும் அலையாகுதடா;
வீசு தென்றல் விம்முதடா
கண்ணா...
உன் விரல் அசைந்தால்
புல்லாங்குழல் இசையாகுதடா;
விரியும் பூவிதழ் நோகுதடா
கண்ணா...
உன் வரவினைக் கண்டால்
புன்னகை சிந்துதடா;
மாரது மயங்குதடா
கண்ணா...
நின்னை மறவேன் என்றிடாது
மனமது வணங்குதடா;
என் வாழ்வது நீயேடா
கண்ணா...
அது என்றும் மாறிடாது
பா மாலை சூட்டுதடா;
யாவிலும் நீயேடா
கண்ணா...
என்னை யாழென மீட்டிட
மடி தருவாயடா;
மிகு ஏழை நானடா
கண்ணா...
உன்னை காதல் கொள்வதில்
யானே பெருங் கள்வனடா;
சிறு முத்தம் வைப்பாயடா
கண்ணா...
நிதம் அதில் பித்தென
மனம் மாறி ஆசை புற்றாய் வளர்வாயடா;
குறு யுத்தம் செய்வாயடா
கண்ணா...
குருவென மாறி
பின்னதன் அர்த்தம் உரைப்பாயடா;
இப் பாத்திரம் நீயேடா
கண்ணா...
நீ இல்லையேல்
நான் ஏதுமற்றேனடா;
கண்ணா....
கண்கள் சொருகுதடா
கண்ணா...
உனைக் காண்பதென்றால்
செங்கதிராகுதடா~~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக