
ஆசையது தந்தாய்
இன்பமது இதழில்
ஈரமற்ற முத்தம் கொடுத்தாய்
உண்மை நேசம் மறைத்தாய்
ஊமையாகி நடித்தாய்
எண்ணம் யாவும் நிறைத்தாய்
ஏளனமாய் நகைத்தாய்
ஐம்புலனும் கலந்தென்னை
ஒன்றாக்கி கவிதை பொழிந்தாய்
ஓயாது காதல் அலையில்
அவ்வை மொழியாய் இனித்தாய்
அக்கென்ற முப்புள்ளியும் எழுத்தென தமிழே நீ மட்டும் உரைத்தாய் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக