பொய்களுக்கான மேடையில் உண்மை தூக்கிலிடப்பட்ட துயரம் துப்பாக்கிகளை துடைத்து வைக்கச் சொல்கிறது
நம்பிக்கை பாத்திரத்தின் ஓட்டையினில் ஒழுகிய எண்ணற்ற கண்ணீர் துளிகளில் இதுவும் ஒன்று
நியாயங்களுக்கான கோப்பையில் விசம் நிரப்பி நீதி கேட்பது விசாரணையின் விலாஎலும்பில் மதமதப்பு மட்டுமே மிஞ்சிடும்
அதிகாரத்தின் நுனியில் அவமான எழுத்துக்கள் எந்த கோப்பிலும் பதிவிடப்படுவதில்லை அது அனாதையாக ஆதாரமற்று மூடப்படுகிறது
எல்லாம் கனவாகிடும் என்ற காரணமோ என்னமோ களவுகள் காக்கப்படுகிறது அதி நுணுக்கமாய்
இன்னும் சீலையின் கேள்விகளுக்கு பலியாக காத்திருப்பது சீதைகளின் கழுத்து மட்டுமே ~~~
- வித்யாசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக