சனி, 7 நவம்பர், 2015

** சுருக்கக் கோடுகள் யாவும் வாழ்வின் சூத்திரங்கள் **



இளமையின் செலவு முதுமை. பழுத்த இலையை பறிக்கத் தேவையில்லை. நிதானமாய் தீண்டும் காற்றின் ஒரு தடவுதல் போதுமானது...
வாழ்கையின் ஆணிவேர் நரையாகும் நிலையில் பக்குவம் வார்த்தைகளை மென்று கொண்டிருக்க விரிசல் விழுந்த உதடுகள் எழுத்துக்களை கோர்ப்பதில்லை. மேனி வறட்சியில் அனுபவ அறுவடை மட்டுமே சாத்தியமான ஒன்று...
துயரம் துருபிடிக்கும் கறையான் நாட்களில் தனியொரு கவலை தின்பது இயலாத இளமையின் கூன் வளைவாகும். தடி கொண்டு தாங்கி கடப்பது வீழ்த்திடும் மூப்பை பிரம்பது பிறப்பதன் ரகசியத்தை நீளெனச் சொல்லும்....
மூச்சும் பாரமென திணறுகையில் திருகும் ஞாபகங்களின் நினைவு சாலையில் அழைக்கும் பயணத்தின் இழுபறி சுவாசத்தின் கதை யாவும் காலத்தின் மிகப்பெரும் கடிதமாகும்...
பொக்கிஷமான யாவும் பொக்கை வாயில் மெல்ல முடியாது ஜீரணிக்காத ஓசைகளின் எட்டா தூரத்தை கட்டிக் கொண்டு தடம் பதிக்கிறது செரிமானக் கூட்டில் சேமித்து வைக்கப்பட்ட சுருக்கு பையின் சில்லரையாய்...
எண்ணங்களின் குவியல் தட்டில் அடுக்கி வைக்கப்பட்ட நிராசை ஒன்று எரியும் சடலமீது எழுந்தாடுகிறது பெரும் சர்ப்பமாய் சாம்பலாகி சந்ததிகளின் முதுகெலும்பு ஜன்னலாய் வேகாது மீள் இளமையாய் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக